பாரளுமன்றத்தை கலைப்பதை கைவிட சிறிசேன தீர்மானம்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைப்பதற்கான முயற்சிகளை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர் இதனை தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய தேர்தலிற்கு அழைப்பு விடுக்கும் உத்தரவை சிறிசேன கடந்த மாதம் விடுத்திருந்தார்

எனினும் சிறிசேன அந்த உத்தரவை கைவிடுவது குறித்து சிந்தித்து வருகின்றார் என அவரிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி அந்த உத்தரவை வாபஸ்பெறுவார் இதன் மூலம் தனது நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பை வழங்குவதை தவிர்த்துக்கொள்வார் என  அவரிற்கு நெருக்கமான வட்டாரங்கள தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தலை வாபஸ்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள்  காணப்படுவதாக சிறிசேனவுடன் தொடர்ச்சியாக தொடர்புகொண்டுள்ள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாராளுமன்றத்தை கலைத்தது அரசமைப்பிற்கு முரணான செயல் என நீதிமன்றம் தெரிவிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை  அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை நீதிமன்றம் தனது நடவடிக்கைக்கு எதிராக தீர்ப்பளிக்கும் என்பது தெரிந்துள்ளதால் ஜனாதிபதி இந்த பிரச்சினையிலிருந்து கௌரவமாக வெளியேறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்துவருகின்றார் என அவரிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.