அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பார்வை இழந்த மணமகளுக்கு ஆதரவாக திருமணத்தில் கலந்துகொள்ள வந்த விருந்தினர்கள் அனைவரின் கண்களையும் மணமகன் கருப்பு துணியால் கட்டிவிட்ட சம்பவம் நெக்குருக வைத்துள்ளது.
குயின்ஸ்லாந்தின் Maleny பகுதியில் நடந்த இந்த அபூர்வ விழாவில் 32 வயதான Stephanie Agnew என்பவர் Robbie Campbell என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
Stephanie Agnew தமது 27-வது வயதில் மரபியல் நோய் காரணமாக தனது கண் பார்வையை முற்றாக இழந்துள்ளார்.
மேலும் இவருக்கு ஆள் ரூபங்களை வெறும் கோடுகளாக மட்டுமே தெரியும் எனவும் கூறப்படுகிறது. இதே நோய் காரணமாக இவரது தாயார் கண் பார்வையை முழுவதுமாக இழந்துள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்ட ராபி காம்ப்பெல், நாம் நமது புலன்களில் ஒன்றை இழக்க நேர்ந்தால், எஞ்சிய புலன்கள் வீரியம் கொள்ளும். இந்த நிகழ்வு நமக்கு புதிய அனுபவத்தை அளிக்கும். இன்று நாம் ஸ்டெபானியின் பார்வையில் இருந்து கொண்டு அந்த அனுபவத்தை பெற உள்ளோம்.
குறித்த பதிவுக்கு ஏற்றவாறே, திருமணத்தில் கலந்து கொண்ட 54 விருந்தினர்களின் கண்களையும் ராபி கருப்பு துணியால் கட்டி விட்டுள்ளார்.
பின்னர் வாசனை மிகுந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் ஸ்டெபானி அழைத்து வரப்பட்டார். அப்போது விழா ஏற்பாட்டாளர்கள் அங்கு நடக்கும் அனைத்தையும் ஸ்டெபானிக்கு விளக்கியுள்ளனர்.
இருவரும் ஒன்றாக மணமேடைக்கு நடந்து செல்லும்போது தம்மால் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றே காம்ப்பெல் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்டெபானி காம்ப்பெலை முதன் முறையாக சந்தித்துள்ளார்.
அவரது குடியிருப்புக்கு அருகாமையில் 18 மாதங்கள் குடியிருந்தும் ஒரு முறை கூட இருவரும் நேரில் அதுவரை சந்தித்தது இல்லையாம்.
இதன் பின்னர் ஸ்டெபானியின் நடவடிக்கையில் ஈர்க்கப்பட்ட காம்ப்பெல், 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.