சொந்த ஊருக்கு திரும்பிய நபருக்கு நேர்ந்த கதி: துடித்து போன மனைவி

பிரித்தானியாவில் இருந்து இந்தியா திரும்பிய நபர் திடீரென மாயமான நிலையில் இதை கடத்தல் வழக்காக பொலிசார் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பெங்களூரை சேர்ந்தவர் பிரசன்னா (39). இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளாக பிரசன்னா பிரித்தானியாவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு சில மாதங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்தார்.

பின்னர் பெங்களூரில் உள்ள வேறு நிறுவனத்தில் கடந்த 3 மாதங்களாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 9ஆம் திகதி பூங்காவுக்கு சென்ற பிரசன்னா பின்னர் மாயமாகி உள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரசன்னாவின் மனைவியும், பெற்றோரும் பொலிசில் புகார் கொடுத்தனர்.

மேலும், தங்கள் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்ததாகவும், அதில் பிரசன்னா எங்களிடம் தான் உள்ளார், நாங்கள் பின்னர் உங்களிடம் பேசுகிறோம் என இருந்ததாகவும் கூறினர்.

இதன் பின்னர் பொலிசார் பிரசன்னாவின் செல்போனை டிராக் செய்தனர், அதிலிருந்து போன் சுவிட் ஆப் செய்யப்பட்டது.

பொலிசார் கூறுகையில், தற்போது இதை கடத்தல் வழக்காக பதிவு செய்துள்ளோம்.

பிரசன்னா சென்ற இடங்களில் உள்ள சிசிடிவி கமெரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

இதனிடையில் பிரசன்னாவின் புகைப்படத்தை அவரின் மனைவியும் பெற்றோரும் சமூகவலைதளங்களில் வெளியிட்டு அவரை தேடி வருகிறார்கள்.