ரணிலை பிரதமராக முன்மொழிந்தது ஐதேக – சிறிலங்கா அதிபருக்கு கடிதம்

சிறிலங்காவின் பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரசிங்கவின் பெயரை, முன்மொழிவதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் காசிம் நேற்று, இது தொடர்பாக அதிகாரபூர்வ கடிதங்களை, சிறிலங்கா அதிபருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

“பிரதமர் பதவிக்காக, ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிவதாக, இந்தக் கடிதம் மூலம், உங்களுக்கு அறியத் தருகிறேன்” என்று அந்த கடிதத்தில், அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தற்போதைய நெருக்கடியில், கூட்டமைப்பு ஆதரவு தந்தமைக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.