காணமல் போன நாய்..18 மாதங்கள் கழித்து நடந்த ஆச்சரிய சம்பவம்

அமெரிக்காவில் 18 மாதங்களுக்கு முன்பு காணமல் போன் நாய் மீண்டும் கிடைத்துள்ளதால், அதன் உரிமையாளர் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் குடியிருப்பில் இருந்த வீடு ஒன்றில் கடந்த 2017-ஆம் ஆண்டு சினட்ரா என்ற நாய் காணமல் போயுள்ளது.

இதனால் அதன் உரிமையாளர்கள் தங்கள் நாய் காணமல் போனதைப் பற்றி சமூகவலைத்தளங்களில் அது தொடர்பான புகைப்படங்களை பதிவேற்றம் செய்திருந்தனர்.

இந்நிலையில் நியூயார்கில் காணமல் போன நாய், புளோரிடா மாகாணத்தில் இந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. நியூயார்கிற்கும், புளோரிடா மாகாணத்திற்கும் இடையே 1800 கி.மீற்றர் இடைவெளி ஆகும்.

சினட்ரா காணமல் போனதை சமூகவலைத்தளத்தில் அறிந்த டேனிஸ் வெரிஸ் என்ற இளம் பெண் அதே போன்ற நாய் இருப்பதை பார்த்துள்ளார்.

அதன் பின் அந்த நாயை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். சினட்ரா எங்களை பார்த்தவுடன் பயப்படவில்லை.

மிகவும் நட்பாக இருந்தது. அதனிடம் மைக்ரோசிப் இருந்தது, ஆனால அதில் குறிப்பிடப்பட்டிருந்த போன் நம்பர் தவறாக இருந்தது என்று கூறியுள்ளார்.

இந்த தகவலை அறிந்த சினட்ராவின் உரிமையாளர் உடனடியாக அந்த இளம் பெண் இருக்கும் வீட்டிற்கு சென்று பத்திரமாக தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்தவுடன் குடும்பத்தினரைக் கண்ட சினட்ரா அவர்கள் மீது அங்கும், இங்கும் ஏறி குதித்தது.

ஆனால் இந்த 18 மாதங்கள் சினட்ரா எங்கு இருந்தது என்பது குறித்து தெரியவில்லை.