வவுனியாவில் பாலியல் தொழிலாளர்களால் ஏற்பட்ட விபரீதம்!

வவுனியா மாவட்டத்தில் 2003 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை 20 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாலியல் நோய்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

அவர்களில் இந்த ஆண்டு ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் 7 பேர் உயிருடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி உலகமுழுவதும் நினைவுகூறப்படுகிறது.

ஓவ்வொருவரும் தமக்கு எச்ஐவி உள்ளதா என பரிசோதனை செய்து அறிவதன் மூலம் 2025 ஆம் ஆண்டளவில் அதனை முற்றாக ஒழித்தல் என்னும் தொனிப் பொருளில் இம்முறை இலங்கையில் உலக எயிட்ஸ் தினம் நினைவு கூறப்படுகின்றது.

எயிட்ஸ் நோய் தொற்று தொடர்பில் வவுனியா மாவட்ட பாலியல் நோய்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார் வவுனியா வைத்தியசாலையில் நேற்று ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

இதன்போதே வவுனியா மாவட்டத்தில் நோய் தொற்று ஏற்படுவதற்கு பாலியல் தொழிலாளர்களே பிரதான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளர்.