இந்தியாவின் கர்நாடக மாநிலகத்தில் திருமணத்திற்கு சில நிமிடங்கள் முன்பு வாட்ஸ் அப்பில் பகிரப்பட்ட புகைப்படங்களால் இளைஞர் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
மணப்பெண் வேறொரு இளைஞருடன் தனிமையில் இருக்கும் புகைப்படங்களே மணமகனுக்கு வாட்ஸ் அப்பில் பகிர்ப்பட்டுள்ளது.
திருமணம் நிறுத்தப்பட்டு மணமகளில் பெற்றோர் மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்த நிலையில், வாட்ஸ் அப்பில் மணமகளுடன் இருந்த இளைஞரை திருமண மண்டபத்தில் பார்த்துள்ளனர்.
உடனே மணமகளின் உறவினர்கள் அந்த இளைஞரை தாக்க முற்பட்டுள்ளனர். இதனை தடுத்த மணப்பெண், தாமும் அந்த இளைஞரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த இளைஞருடன் குறித்த இளம்பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருமணம் நிச்சயிக்கும் முன்னரே தமது காதலை பெற்றோருக்கு வெளிப்படுத்தியதாகவும், ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் மணப்பெண் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே தங்கள் இருவருக்கும் இடையே நடந்த தனிப்பட்ட புகைப்படங்களை மணமகனுக்கு அனுப்ப முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.