கதறி அழும் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் தந்தை!! ஊரே சோகமயமானது…

மட்டக்களப்பு வவுணதீவு காவற் சாவடியில் கடந்த 30 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஸ் தினேஸின் இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநரின் பிரசன்னத்துடனும் ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் இரங்கலுரையுடனும் பொலிஸ் மரியாதையுடனும் அவரது சொந்த ஊரான பெரியநீலாவணை பொது மயானத்தில் இடம்பெற்றது.

குறித்த இறுதிசடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட பூதவுடலை பொது மயானத்திற்கருகில் வைத்து பொலிஸார் பொறுப்பேற்றுக் கொண்டு பூரண பொலிஸ் மரியாதையுடன் 39 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கிற்கு கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதிப் பொலிஸ் மா அதிபர் கப்பில ஜயசேக்கர அம்பாரை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதசிங்ஹ அம்பாரை பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜேசேக்கர உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பொலிஸ் உத்தியோகத்தரின் இறப்பால் ஊரே சோகமயமானதாக தெரிவிக்கப் படுகிறது..

இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஸ் தினேஸ் அவர்களின் உடல் பெரியநீலாவணையில் பூரண பொலிஸ் மரியாதையுடன் இன்று (2) நல்லடக்கம் செய்யப்பட்டது.

பொலிஸ் உத்தியோகத்தர் தினேசின் உயிரிழப்பால் பெரியநீலாவணை மட்டுமிண்றி கல்முனை பிரதேசமே சோகமயமாக உள்ளதுடன், இறுதியஞ்சலி நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்தகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

வவுணதீவில் கடமையில் இருந்தபோது இனந்தெரியாகவர்களினால் தினேஸ் மற்றும் பிரசன்ன ஆகிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.