விளையாடிய சிறுமியை அழைத்துச் சென்று பொலிசார் செய்த மோசமான செயல்!

தமிழகத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் வாசு. இவர் மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்றிரவு வில்லிவாக்கப் பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அப்போது சிறுமி கதறி அழுததால், அந்த சத்ததைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்த இடத்திற்கு வந்த போது, அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

அதன் பின் சிறுமியிடம் அவர்கள் கேட்ட போது, சிறுமி சொன்ன தகவலால் ஆத்திரமடைந்த அவர்கள், அவரை விரட்டிச் சென்று பிடித்து அடித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவரை அருகிலிருக்கும் வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைத்த போது, பொலிசார் அவர் மீது புகார் ஏதும் பெறாமலும், வழக்கு பதிவு செய்யாமலும் விட்டுள்ளனர்.

இந்த தகவல் உடனடியாக உயரதிகாரியின் கவனத்திற்கு சென்றதால், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் காவல் நிலைய குழந்தை நல அலுவலர் மூலம் விசாரணை நடத்தியதில், கடந்த 4 மாதமாக சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

சிறப்பு உதவி ஆய்வாளரை பிடித்து விசாரணை செய்த வில்லிவாக்கம் பொலிசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.