தளபதி சூசையின் சகோதரரின் இறுதிக்கிரியை: படகில்!

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பின் தளபதி சூசையின் சகோதரரும், மரபுக்கலைகள் ஆசானுமாகிய தில்லை சிவலிங்கம் என அழைக்கப்பட்ட தில்லயைம்பலம் தவராசாவின் இறுதிக்கிரியைகள் நேற்று (02) பொலிகண்டியில் இடம்பெற்றன.

கடந்த நவம்பர் 29ம் திகதி இவர் இயற்கை எய்தியிருந்தார்.

பாரம்பரிய கலைகளான உடுக்கை, சிலம்பம் என்பவற்றில் வித்துவானாக திகழ்ந்த சிவலிங்கம், அவற்றை ஏனையவர்களிடம் பரப்புவதிலும் ஆர்வமாக இருந்தார். அவரது இழப்பால் பொலிகண்டி மக்கள் பெரும் சோகத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் அவரது இறுதி ஊர்வலமும் பலரதும் கவனத்தை ஈர்த்தது. அலங்கரிக்கப்பட்ட படகு மாதிரியொன்றிலேயே, அவரது உடல் வைக்கப்பட்ட பெட்டி இறுதிக்கிரியைக்காக கொண்டு செல்லப்பட்டிருந்தது.