13 வருடங்களாக தொடர்ந்து பலாத்காரம் செய்த தந்தை..

ஆப்கானிஸ்தானில் தந்தையால் தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் தந்தைக்கு தண்டனை வாங்கி கொடுக்க போராடி வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் கடிரா என்ற 23 வயது இளம்பெண்ணை அவரது தந்தை தொடர்ந்து 13 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது.

தந்தையின் இந்த மோசமான செயலால், கடீரா பல முறை கருக்கலைப்பு செய்ததாகவும், இரண்டு முறை கருக்கலைப்பு செய்ய முடியாமல் குழந்தை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது துணிச்சலுடன் தந்தையை எதிர்த்து அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க எண்ணியுள்ளார் கடீரா.

இருந்த போதிலும், அவரால் நீதியை பெற முடியாமல் தவித்து வருகிறார். ஆப்கானிஸ்தானில் நீதித்துறையில் ஊழல் நடப்பதாக கூறப்படுகிறது. இதனால் நீதியை நிலைநாட்ட முடியாது உள்ள நிலையில் கடீராவின் மாமா மற்றும் இதர உறவினர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.

இதனால் தனது தாய் மற்றும் குழந்தைகளுடன் குறித்த பெண் தலைமறைவு வாழ்க்கை வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடீராவின் நிலை பல ஊடகங்களில் வந்த நிலையில் அவரின் வாழ்க்கையை இயக்குனர் சஹரா மணி என்பவர் திரைப்படமாக எடுக்கவுள்ளார்.

இதேவேளை நான் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனையைப் போன்று ஆயிரமாயிரம் பெண்கள் சந்திக்கிறார்கள் எனக் கூறும் கடீரா,

என் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கவேண்டும், என் தந்தைக்கு சட்டத்தின் கீழ் தண்டனை கிடைக்கும் வரை போராடுவேன் என்று கூறியுள்ளார்.