ஒற்றைப்பக்க எழுத்து ரூ. 3.41 கோடி ரூபாய்.. அப்படியென்னதான் அதில் எழுதியிருக்கு..? உலகை மிரட்டிய புரட்சி.!

காரல்மார்க்ஸ் கைப்பட எழுதிய ஒற்றைப்பக்கம் கொண்ட குறிப்புகள் ரூபாய் 3 கோடிக்கு மேல் ஏலம் விடப்பட்டிருக்கிறது.

ஜெர்மனி நாட்டின் பொருளாதார அறிஞரும் கம்யூனிச தத்துவஞானியுமான காரல் மார்க்ஸின் 200வது பிறந்தநாள் 2018ல் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

அதனையொட்டி அவர் எழுதிய மூலதனம் புத்தக்கதின் ஒற்றைப்பக்கம் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.

1250 பக்கங்களுக்கும் மேற்பட்ட டாஸ்கேப்பிட்டல் புத்தகத்தில் மூலதனம் குறித்து காரல்மார்க்ஸ் கடந்த 1850ம் ஆண்டு முதல் 1853ம் ஆண்டு வரை லண்டனில் தங்கியிருந்து எழுதினார்.

இந்த புத்தகத்தின் ஒற்றை பக்கத்தில் காரல்மார்க்ஸின் கையெழுத்து குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. அதை பெய்ஜிங் நகரை சேர்ந்த பெங்க்லன் என்பவர் பாதுகாத்து வைத்திருந்தார். இந்நிலையில் அந்த கையெழுத்து பிரதியை தற்போது வெளியிட்டார்.

அது 5 லட்சம் அமெரிக்க டாலருக்கு (ரூபாய் 3.41 கோடி) ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. இந்த விலையானது அடிப்படை விலையைவிட 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைபோல் கார்ல்மார்க்ஸின் உற்ற நண்பரும், பொருளாதார அறிஞருமான பிரடரிக் ஏங்கல்சும் கம்யூனிஸ்ட் மெனிபெஸ்டோ புத்தகம் 2 லட்சம் அமெரிக்க டாருக்கு (ரூ.1.36 கோடி) ஏலத்தில் விற்பனையானது. டாஸ்கேப்பிட்டல் புத்தகம் பொருளாதாரத்தில் கார்ல்மார்க்ஸின் சிந்தனைகளையும் உலக தொழிலாளி வார்க்கத்தின் கண்ணோட்டங்களையும் அறிந்து கொள்வதற்கான உலகின் மிகச்சிறந்த நூலாக கருதப்படுகிறது.

இதைப்பற்றி எதிரும்புதிருமாக பேசிய பல அறிவு ஜீவிகள் இன்றைக்கு தங்களுடைய கருத்தை மாற்றிக்கொண்டு இதுவே உலக உழைப்பாளி மக்களுக்கான தலைசிறந்த நூல் என்று இப்போது கூறுகின்றனர்.

சொல்லப்போனால் சில விஷயங்களுக்கு எப்போதும் மதிப்பு கூடிக்கொண்டே தான் செல்கிறது என்பதை நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும். இதுதான் உலக மேதை காரல் மார்க்ஸ் பயணித்த பாதை நமக்கு சொல்லும் செய்தி.