பள்ளிக்கு சென்ற மாணவியின் வாயில் விஷம் ஊற்றிய பெண்கள்! அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்!

சென்னை கிழக்கு தாம்பரம் கண்ணகி தெருவை சேர்ந்த முருகனின் மகள், அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அப்பகுதியின் புத்தர் தெருவில் பள்ளி செல்வதற்காக அந்த மாணவி நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த காரில் இருந்து இறங்கி வந்த மூன்று பெண்கள் எந்த பெண்ணை வழிமறித்தனர். அவர்களை பார்த்து அந்த மாணவி ஓட முயற்சிக்கவே, பின்னர் மாணவியை பிடித்து அந்த பெண்கள் வாயில் விஷம் ஊற்றி கொல்ல முயற்சி செய்துள்ளனர்.

இதையடுத்து, பயந்து போன அந்த மாணவி வாயில் விஷம் ஊற்றியபோது கூச்சலிட்ட உடன் அந்த மூன்று பெண்களும் காரில் ஏறி சென்று விட்டனர். அக்கம்பக்கத்தினர், அந்த சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாணவியின், ரத்தமாதிரியை சோதனைக்கு உட்படுத்த ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வறிக்கை வந்தவுடன் சிறுமிக்கு கொடுத்தது விஷமா? என்று தெரிந்து விடும் ஆய்வாளர்கள் கூறினார். இதுகுறித்து, சேலையூர் காவல் துறை விஷனை நடத்தி வருகின்றனர்.