உல்லாசத்திற்கு அடிமையான தொழிலதிபர்: 70 லட்சத்தை பிடுங்கிக்கொண்டு துரத்திய உல்லாச அழகி

பெங்களூருவில் உல்லாச அழகி ஒருவர் தொழிலதிபரை நூதன முறையில் மோசடி செய்து 70 லட்சத்தை அபேஸ் செய்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு ராணி என்ற மனைவியும் பிரீத்தி என்ற மகளும் உள்ளனர். பிரீத்திக்கு கிருஷ்ணதாஸ் என்ற தொழிலதிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களது நட்பு கள்ளக்காதலாக மாறி இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர். பிரீத்தி அவ்வப்போது கிருஷ்ணதாஸிடம் பணம் பறித்து வந்துள்ளார். தொடர்ச்சியாக பணம் கொடுத்து வந்த கிருஷ்ணதாஸ் ஒரு கட்டதில் பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.
சமீபத்தில் பிரீத்தி கிருஷ்ணதாஸை தனது வீட்டிற்கு வரசொன்னார். அதன்படி கிருஷ்ணதாஸ் அங்கு சென்றார். அப்போது காவலர் உடையில் வீட்டிற்குள் நுழைந்த பிரீத்தியின் கணவரும், தம்பியும் அடுத்தவர் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் உன்னை கைது செய்கிறோம் என மிரட்டினர். இதனால் கிருஷ்ணதாஸ் மிரண்டு போனார். கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் 5 லட்சம் தர வேண்டும் என அவர்கள் கூறினர். அதன்படி கிருஷ்ணதாஸ் 5 லட்சம் கொடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு பின்னர் கிருஷ்ணதாஸிற்கு போன் செய்த போலி காவலர்களான பிரீத்தியின் தம்பியும், கணவரும் பிரீத்தி இறந்துவிட்டதாகவும், உன் மீது தான் சந்தேகம் இருப்பதாகவும் மிரட்டியிருக்கின்றனர். இந்த வழக்கிலிருந்து விடுபடவேண்டுமானால் 30 லட்சம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். பயந்துபோன கிருஷ்ணதாஸ் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார். இவ்வாறு அவரை மிரட்டி 70 லட்சம் பறித்துள்ளர்.
அவர்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகமாகவே, சந்தேகமடைந்த கிருஷ்ணதாஸ் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் தான் கிருஷ்ணதாஸிற்கு இது முழுவதும் பிரீத்தியின் செட்டப் என தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் அந்த உல்லாச அழகி பிரீத்தி உள்பட அந்த மோசடி கும்பல்களை கூண்டோடு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.