பதவி விலகத் தயாராகிறார் ஜனாதிபதி மைத்திரி… ?

சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளால் பதவி விலகத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை ஐக்கிய தேசிய முன்னணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவு செய்துள்ளார்.

கட்சி உறுப்பினர்களுடான போது ஜனாதிபதி உணர்ச்சிவசப்பட்டு பேசியதாகவும், தன்னை அதிகம் நெருக்கடிக்கு உள்ளாக்கினால், மக்களுக்கு உரையாற்றிவிட்டு, ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

மீண்டும் பொலநறுவைக்கு சென்று விவசாய நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மைத்திரி தெரிவித்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.