தலைவாழை இலையில் நடிகைக்கு பிரியாணி விருந்தளித்த கமல்! தீயாய் பரவும் புகைப்படங்கள்

புதிதாக திருமணமான மணமக்கள் சுஜா வருணீக்கு அவரின் காதல் கணவருக்கும் நடிகர் கமல் பிரியாணி விருந்தளித்து அசத்தியுள்ளார்.

பிக்பாஸ் புகழ் சுஜா வருணீ, நடிகர் சிவக்குமார் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது.

திருமணத்தை நடிகர் கமல் அப்பா ஸ்தானத்தில் இருந்து நடத்தி வைத்தார். இந்த நிலையில் சுஜா-சிவா இருவரையும் சமீபத்தில் தனது வீட்டிற்கு அழைத்த கமல் அவர்கள் இருவருக்கும் தலைவாழை இலையில் பிரியாணி விருந்தளித்து அசத்தியுள்ளார்.


இதுகுறித்து நடிகை சுஜா தனது ட்விட்டர் பக்கத்தில்,” என்னையும், அத்தானையும் (சிவா) கமல் அப்பா மதிய உணவுக்கு அழைத்து விருந்தளித்தார் என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.