உலகத்தில் மிகவும் தொன்மையானதும் அழிக்கவோ இல்லை மறக்கவோ முடியாத ஒன்று தமிழும், தமிழர்களும்.
காலப்போக்கில் ஏற்பட்ட பல கிளர்ச்சிகளாலும், சதி மற்றும் சூழ்ச்சிகளாலும் தமிழையும் தமிழரையும் சிதைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றையும் தாண்டி தமிழ் மொழி உலக நாடுகள் எங்கும் ஆழ வேரூன்றுகின்றது.
அவ்வாறான தமிழுக்கும் தமிழர்களும் கௌரவமளிக்கும் மற்றும் பெருமையை உலகறியச் செய்யும் ஒரு நிகழ்வே ஐபிசி தமிழா நிகழ்வு.
இந்நிலையில் தமிழர்களின் பண்பாடு தொடர்பில் அவர்களது கலாச்சாரம் மற்றும் தமிழர்களின் வீரம் போன்ற பல விடயங்கள் தொடர்பாக ஐபிசி தமிழ் தன்னுடைய நிகழ்ச்சிகள் ஊடாக உலகறியச் செய்து கொண்டிருக்கின்றது.
அவ்வாறான ஒரு விசேட செய்தியை தாயக மக்களுக்காக எடுத்து வருகின்றது ஐபிசி தமிழ்.
யாழ்ப்பாணத்தின் தெருவெங்கும் இந்த அதிசய குரல் தற்போது ஒலித்துக்கொண்டிருக்கின்றது.