சிறிலங்காவில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் சபைகளுக்கு அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
இதற்கமைய, எந்தவொரு அரசாங்க நிகழ்வையும் தனியார் விடுதிகளில் நடத்தக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்துக்குச் சொந்தமான அரங்குகள் மற்றும் நிறுவகங்களில் மாத்திரமே, அரசாங்க நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
அரசாங்க நிறுவனங்களின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே சிறிலங்கா அதிபர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று அதிபர் செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.