பிரான்சில் பல நாட்களாக சீரற்ற நிலை காணப்பட்டு வருகிறது. பிரான்ஸ் அதிபர் உயர்த்தியுள்ள வரிகளுக்கு எதிராக மக்கள் திரண்டு பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இன் நிலையில் இதில் கலந்துகொண்ட பல பள்ளி மாணவர்கள் கார்களை எரித்து , கடைகளை உடைத்து பெரும் சேதங்களை விளைவித்துள்ளார்கள். இதனால் நிலமை கட்டுக்கடங்காமல் போகவே பிரான்ஸ் பொலிசார் வயது குறைந்த சிறுவர்கள் என்றும் பாராமல், அவர்களை கைதுசெய்துள்ளார்கள்.
இவ்வாறு சுமார் 153 மாணவர்களை பிரான்ஸ் பொலிசார் கைதுசெய்து. கைகளைக் கட்டி ஒரு இடத்தில் தடுத்து வைத்துள்ள காட்சிகளை ஒருவர் புகைப்படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.