மனித குல வரலாற்றில் முக்கியமான நாள். நாசா அனுப்பிய இன்சைட் என்னும் ராக்கெட் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் இறங்கி கால் பதித்துள்ளது. தானாக இயங்கும் ஆய்வு கூடம் ஒன்றை இது தாங்கிச் சென்று, கிரகம் மீது ஏவியுள்ளது. செய்வாய் கிரகத்தினுள் பிரவேசித்தவேளை அது சுமார் மணிக்கு 12,000 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது. பின்னர் படிப்படியான அதன் வேகம் குறைக்கப்பட்டு. மணிக்கு 5 KM என்ற நிலைக்கு வந்து, வெற்றிகரமாக மணல் பாங்கான இடம் ஒன்றில் கால் பதித்துள்ளது. நவம்பர் மாதம் 26ம் திகதி கால் பதித்த இன்சைட் ஆய்வு கூடம், தனது பற்றரிகளை சார்ச் செய்து, நேற்றைய தினம்(2.12.2018) புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.
இதன் அதி நவீன கமரா இன்னும் இயங்கவில்லை. அதில் தூசி படிந்துள்ளதால். தன்னை தேனே அது சுத்தம் செய்து மிக மிக தெளிவான புகைப்படங்களை அது அனுப்ப உள்ளது. இதுபோக லண்டன் இம்பிரியல் பல்கலைக் கழகத்தில் தயாரிக்கப்பட்ட, சென்சர் கருவிகள் இந்த ஆய்வு கூடத்தில் உள்ளது. இவை செய்வாய் கிரகத்தின் நிலத்தை அதன் உள் கட்டமைப்பை அறிந்து பூமிக்கு அனுப்ப உள்ளது. இதில் மிகவும் பெருமையான விடையம் என்னவென்றால் இம்பிரியல் பல்கலைக் கழகம், மற்றும் ஆக்ஸ்பேட் பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்தே இந்த சென்சர் கருவிகளை தயாரித்து நாசாவுக்கு வழங்கியுள்ளார்கள். இதனை தாயாரிக்க பெரிதும் உதவிய பல மாணவர்களில் முதன்மை நிலையை வகித்தவர்கள் சில ஈழத் தமிழ் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
சில பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களது பெயர்களை நாசா விண் வெளி நிலையம் வெளியிடவில்லை என அதிர்வு இணையம் அறிகிறது. அவர்களும் தமது பெயர்களை வெளியிட தடை உள்ளது. மனித குலம் பூமியில் அழியும் நிலை ஒரு நாள் தோன்றும். எனவே அதற்கு முன்னர் பூமிக்கு இணையான ஒரு கிரகத்தை கண்டு பிடிக்க பல விஞ்ஞானிகள் முயற்ச்சி செய்து வருகிறார்கள். அந்த வகையான ஆராட்ச்சியில் இது மிகவும் முன் நிலை வகிக்கிறது.