ரணில் தரப்பினருக்கு திடீரென அழைப்பு ஏற்படுத்தி பேசிய மகிந்த! பேசப்பட்டது என்ன?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்தவுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமராக மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த பின்னர், நாட்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. இந்நிலையில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவைக்கும், பிரதமருக்கும் இடைக்காலத் தடை விதித்து மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லாமல், ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சின் அதிகாரிகளைக் கொண்டு தற்பொழுது நாடு இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடர்பான வழக்கும் விவாதத்தில் உள்ளது. அத்தோடு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் திகதியும் பிற்போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சற்று முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்தவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடியதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கலந்துரையாடல் இன்று இரவு 9:10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதன் போது என்ன கலந்துரையாடப்பட்டது என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.