க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவனுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் பதில் அனுப்பிய ஆசிரியை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு சட்டவிரோதமாக விடை எழுதிய மாணவன் ஒருவரையும் அதற்கு உதவிய ஆசிரியை ஒருவரையும் பாலங்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பாலங்கொட பாடசாலையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய அதே பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பரீட்சார்த்தி மற்றும் ஆசிரியையாகும்.

சந்தேக நபரான பரீட்சார்த்தி அவரது கால்களுக்கிடையில் கைத்தொலைபேசியை மறைத்து வைத்து பரீட்சைக்கு விடை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பரீட்சார்த்தி பரீட்சை நிலையத்திற்கு 20 நிமிடங்கள் தாமதமாக வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தாமதமாக வந்தபோதுதான் தொலைபேசியை மறைத்து எடுத்துச்சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, ஆசிரியை எஸ்.எம்.எஸ் மூலம் பொருத்தமான விடைகளை குறித்த பரீட்சார்த்திக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இடம்பெற்ற ஆங்கிலப் பரீட்சை வினாத்தாளுக்கே இவ்வாறு சட்டவிரோதமாக விடை அளித்துள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.

பரீட்சை நிலைய உத்தியோகத்தர்களால் வலய கல்வி அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.