பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகிறது!

நக்கீரன்

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. ஜனாதிபதி சிறிசேனா தான் எடுத்த தடாலடி முடிவுகளை முதலை போல விடாது பிடித்துக் கொண்டுள்ளார். பதவியைத் துறந்துவிட்டு பொலநறுவைக்குப் போய் கமம் செய்வேனேயொளிய நான் எடுத்த முடிவுகளை யார் வந்தாலும் மாற்ற மாட்டேன்,  “எனக்குப் பிடிக்காத  ரணிலை  நாடாளுமன்றத்தில் உள்ள மொத்தம் 225 உறுப்பினர்கள் ஆதரித்தாலும் நான் அவரை பிரதமராக நியமிக்க மாட்டேன்” என்கிறார். என நாளாந்தம் சூளுரைக்கிறார்.

ஒக்ரோபர் 26 அன்று தனது பரம எதிரியான மகிந்த இராஜபக்சாவை பிரதமராக முடிசூட்டினார்அதன் பின் பிரதமர் ரணிலை பதவியில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பினார்கேட்டால் அவரை எனக்குப் பிடிக்கவில்லைஅவரோடு வேலை செய்ய முடியாதுஅவர் மேட்டுக்குடியில் பிறந்த சீமான்அவர் ஓர் அந்நியன்எங்களது பண்பாடு அவருக்குத் தெரியாது என்கிறார்.

சரி இருக்கட்டுமேஆனால் அரசியல் யாப்பு என்ன சொல்கிறதுயார் நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரும்பாலான உறுப்பினர்களது நம்பிக்கையைப் பெற்றிருக்கிறாரோ அவரைத்தான் ஜனாதிபதி பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்கிறதுனாதிபதிகுப் பிடித்த ஒருவரைத்தான் பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அரசியல் யாப்புச் சொல்லவில்லை.

ஒக்ரோபர் 27 னாதிபதி அரசிதழ் மூலம் நாடாளுமன்றத்தை  நொவெம்பர் 16 வரை ஒத்தி வைத்தார்.

நவம்பர் 09  நாடாளுமன்றத்தைக்  கலைக்கும்  அறிவிப்பைஜனாதிபதி  அரசிதழில் வெளியிட்டார்.

நவம்பர் 13 உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தடையுத்தரவைப் பிறப்பித்ததுமனுக்கள் மீதான விசாரணை டிசெம்பர் 04, 05, 06 நடைபெறும் என்றும் டிசெம்பர் 07 தீர்ப்பு வழங்கப்படும் என்றும்  இரண்டு நீதிபதிகளும்  அறிவித்தார்கள்இப்போது காலக்கெடு டிசெம்பர் 08 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 14, நாடாளுமன்றம் மஹிந்த இராசபக்சாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியதுஅதற்கு ஆதரவாக 121 நா.உறுப்பினர்கள் வாக்களித்தார்கள்அதனை ஏற்க ஜனாதிபதி மறுத்தார்.

நவம்பர் 16, மீண்டும் இரண்டாவது முறையாக ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதுஇம்முறை 122 நா.உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்னாதிபதி அதனை ஏற்க மறுத்தார்.

நவம்பர் 23,  மேலும் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் மஹிந்த இராசபக்சாவுக்கு எதிராக 122 நா.உறுப்பினர்களால்  நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.

டிசெம்பர் 03, 2018 அன்று தன்னைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடம் அடுத்த 24 மணித்தியாலத்தில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு 24 மணித்தியாலத்தில் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி சிறிசேனா உறுதிமொழி வழங்கினார். அதனை அவர் செய்யவில்லை.

டிசெம்பர் 03,  122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு மனுவை (Writ of Quo Warranto) சமர்ப்பித்தார்கள்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக மூத்த வழக்கறிஞர் கனகஈஸ்வரன் மற்றும் சுமந்திரன்  தோன்றினார்கள். சட்டவாதிகளின்  வாதத்தைத் தொடர்ந்து  மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால  உத்தரவு பிறப்பித்துள்ளது. இராசபக்சா மற்றும் அவரது முழு அமைச்சர்கள்துணை அமைச்சர்கள்இராசாங்க அமைச்சர்கள் ஆகியோரது  அதிகாரம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக  இடைக்கால தடையுத்தரவு  சொல்லியது. மேலும் அவர்கள் யார் கொடுத்த அதிகாரத்தின் கீழ் பதவி வகிக்கிறீர்கள் என விளக்கம் தருமாறு  (The court also issued notice on Respondents and directs them to show by what authority they hold office ) கேட்டது.   முழு விசாரணையை  டிசெம்பர் 13, 14 க்கு தள்ளிவைத்துள்ளது.

டிசெம்பர் 05மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து  இராசபக்சா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய நினைத்தார். ஆனால் அந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் போதிய நீதியரசர்கள்  இல்லை. காரணம் உச்ச நீதிமன்றத்தில் உள்ள 9 நீதியரசர்களில்  ஈவா வனசுந்தர என்ற நீதியரசர் அடுத்து ஆண்டின் முற்பகுதியில் இழைப்பாற இருப்பதால் அவர் வழக்கை  விசாரணை செய்ய மறுத்துவிட்டார். எனவே ஒன்பது நீதியரசர்களில் எட்டு நீதியரசர்கள் வழக்கை விசாரிக்க முடியாமல் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில்  இரண்டு இடம் காலியாக உள்ளது. காலியான இடங்களை நிரப்ப ஜனாதிபதி நாலு பேரது பெயர்களை அரசியல் யாப்பு சபைக்கு அனுப்பியிருந்தார்.  அதில் நீதிபதிகள் ஆன  எஸ். துரைராசா மற்றும் காமினி அமரசேகரா ஆகியோரின் பெயர்களை அரசியல்யாப்பு அவை பரிந்துரை செய்துள்ளது. ஆனால் சனாதிபதி சிறிசேனா  நியமனத்தைக் காலதாமதம் செய்கிறார். உச்ச நீதிமன்றத்தை வளைத்துப் போட சூழ்ச்சி செய்கிறாரா என்ற ஐயம் எழுந்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இன்று நாட்டின் முழு ஆட்சியும் ஜனாதிபதி சிறிசேனாவின் கைக்குப் போய்விட்டது. அமைச்சின் செயலாளர்கள் தங்களது கடமைகளைத் தொடர்ந்து செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் பேசிய ஜனாதிபதி சிறிசேனா மேல் நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து மறைமுகமான மெல்லிய தாக்குதலைத் தொடுத்திருக்கிறார். ஒரு ஊர்ப்புற விகாரையின் தலைவராக இருக்கும் தேரர் ஒருவர் பவுத்த மதபீடத்தின் முதன்மைத் தேரருக்கு ஆணையிடுவது போன்றது என சிங்களத்தில் விமர்ச்சித்துள்ளார் ( නිකායක මහානායක කෙනෙක් කරන්න ඕන වැඩක්විහාරාධිපති කෙනෙක් දේශනා කරලා).  அதாவது  ஊர்ப்புற விகாரையை மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கும்  பவுத்த மதபீடத்தின் முதன்மைத் தேரரை தன்னோடும் ஒப்பிடுகிறார்!

அதிகார வரலாறு என்பது பயித்தியத்தின் வரலாறு  (பயித்தியம் பற்றிய ஒரு சமூக வரலாறுஒரு பயித்தியக்காரனின் கண்ணோட்டத்தில் உலகம்) என்ற நூலை எழுதிய றோய் போர்த்தர் . (“The history of madness is the history of power.” Roy Porter (A social history of madness: The world through the eyes of the insane) சொல்கிறார்.

இப்போது சிறிசேனா ஒரு பயித்தியம் எனப் பலரும் திட்ட தொடங்கியுள்ளார்கள்ரணிலை மட்டுமல்ல சரத் பொன்சேகாவையும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று சிறிசேனா சிறிலங்கா சுதந்திரக் கட்சி மாநாட்டில் தெரிவித்தார்அதற்குப் பதிலளித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் பொன்சேகா மிகக் கடுமையாக அவரைத் திட்டித் தீர்த்தார்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் அரச தலைவர்படைத் தளபதிகள் ஆகியோர் ஆண்டு தோறும் மனநலப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்அதேபோல் இங்குள்ளவர்களுக்கும் செய்ய வேண்டும். மனநோயாளியான ஜனாதிபதி இரண்டு வாரங்கள் அங்கொடையில் சிகிச்சை பெற்றாலும் பரவாயில்லைஅதற்கு ஏற்ற வகையில் சட்டத்தில்கூட திருத்தம் செய்யலாம்”  என்றார்.

சிறிசேனா முன்னாள் பிரதமர் இரணில் விக்கிரமசிங்க ஒரு ஊழல்வாதி,  பல குற்றவாளிகளைபாதாள உலகத்தினரைக் காப்பாற்றியவர் எனக் குற்றம் சாட்டுகிறார்ஆனால் சிறிசேனாவின் இலட்சணம் என்னஊழலுக்கு எதிராக வாளை வீசியவரா?

2008 – 2009  காலப்பகுதியில் கொழும்பிலும் அதனைச் சுற்றிய நகர்ப்புறங்களிலும் 11 தமிழ் இளைஞர்கள் (பெரும்பாலும் மாணவர்கள்) வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள்இந்த கொலைகளுக்குப் பின்னால் கடற்படையைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரி சந்தான பிரசாத் ஹெட்டியாராச்சி (நேவி சம்பத்)  என்பவர் இருந்திருக்கிறார்இதனை விசாரணை மூலம் கண்டு பிடித்த பொலீஸ் புலனாய்வுப் பிரிவு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.  இந்த நேவி சம்பத்தைக் காப்பாற்ற அப்போது கடற்படைத் தளபதியாக இருந்த இரவீந்திரா விஜயகுணரத்தின அவருக்கு ரூபா 5 இலட்சம் கொடுத்து மலேசியாவுக்குத் தப்பியோடச் செய்தார்கடத்தலுக்கும் கொலைக்கும் உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் விஜயகுணரத்தினாவைக்  கைது செய்ய பொலீஸ் புலனாய்வுப் பிரிவும் நீதிமன்றமும் படாத பாடு பட்டனகாரணம் அவரைச்   சிறிசேனா பாதுகாத்து வந்தார்.  விஜயகுணரத்தினாவிடம் வாக்கு மூலம் அளிக்க செப்தெம்பர் 10 ஆம் நாள் அலுவலகத்துக்கு வருமாறு புலனாய்வுப் பிரிவு கேட்டிருந்ததுஆனால் அதே நாள் காலை சிறிசேனா அவரை மெக்சிக்கோ நாட்டின் தேசிய நாளில் கலந்து கொள்ள அனுப்பிவிட்டார்!

சனாதிபதி சிறிசேனா நடாத்திய அரசியல் யாப்பு ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் தனக்கு எதிராக விசாரணை நடத்திய பொலீஸ் அதிகாரி நிஷந்த சில்வாவை (இவரது தந்தையார் ஒரு தமிழர்விஜயகுணவர்த்தன படைகளின் முதன்மை அதிகாரி (Commander Defence Staff)  என்ற முறையில் இடமாற்றம் செய்யுமாறு  பொலீஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்தார்நிஷந்த சில்வா நீர்கொழும்புக்கு மாற்றப்பட்டார்நல்லகாலமாக அவருக்குச் சார்பாக ஊடகங்கள் பொது அமைப்புக்கள் உரத்துக் குரல் கொடுத்தனகுறிப்பாக இராபச்சாவின் ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட லசந்தா விக்கிரமதுங்காவின் மகள் குரல் எழுப்பினார்இதனைக் கண்ட சுயாதீன பொலீஸ் ஆணையம் தலையிட்டு  நிஷந்த சில்வாவின்  இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு பொலீஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்தது.

சிறிசேனாஇரணில் விக்கிரமசிங்க பிணைமுறிவு விற்பனையில் ருபா 11 பில்லியனைக் கொள்ளை அடித்தவர்  எனச் சாடிவருகிறார்.  வெளிநாட்டு இராசதந்திரிகள்துரதுவர்கள் போன்றோரைச் சந்திக்கும் போதும் இரணில் விக்கிரமசிங்கவும் அவரது அரசாங்கமும் ஊழல் நிறைந்தது எனக் குற்றம் சாட்டினார். இராசபக்சா ஆதரவாளர்களும்ஊடகங்களும் இந்தப் பிணைமுறிவு விற்பனை கையில் எடுத்து ரணில் மத்திய வங்கியை கொள்ளையடித்து விட்டதாக  கடுமையான பரப்புரையைச் செய்கிறார்கள்.

ஆனால் இந்த பிணைமுறி விற்பனை தொடர்பாக சனாதிபதி சிறிசேனா நியமித்த விசாரணைக் குழு இரணில் விக்கிரமசிங்க குற்றமற்றவர் எனத் தீர்ப்பு எழுதியுள்ளது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்திலும்  சமர்ப்பிக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

காதலிலும் போரிலும் எல்லாமே நியாயம்தான் (All is fair in love and war) என்று சொல்வார்கள். அரசியலிலும் அப்படித்தான். ஆளுக்காள் கடுமையாகத் திட்டிக் கொள்கிறார்கள்.

அமைச்சரவை செயலிழந்து விட்டது. அரச இயந்திரம் முடக்கப்பட்டுவிட்டது. சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்து வருகிறது. இலங்கையின் நாணய மதிப்பு உலகச் சந்தையில் சறுக்கி வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் இலங்கைப் பக்கம் வரப் பயப்படுகிறார்கள். இருக்கிறவர்கள் விட்டால் போதும் என்று ஓடி ஒளிகிறார்கள்.  நாடாளுமன்றத்தை ஆளும் கட்சி புறக்கணிக்கிறது. எல்லாமே அல்லோல கல்லோலப்படுகிறது.

ஆனால் சனாதிபதி சிறிசேனா நாளொரு பேச்சு  பொழுதொரு தடால் அறிவித்தல் என நடந்து கொள்கிறார். அவரிடம் இம்சை அரசன் புலிகேசி 23 தோற்றுப் போவான்.

மொத்தத்தில் பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகிறது!