கோடிகள் கொட்டி மகளுக்கு ஆடம்பர திருமணம்…. ஏழைகளுக்கு அம்பானி அளித்த இன்ப அதிர்ச்சி

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி தமது மகள் இஷாவின் திருமணத்தை அடுத்து ஏழைகளுக்கு 4 நாட்கள் அன்ன தானம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த அன்ன தான நிகழ்ச்சியில் நால் ஒன்றுக்கு சுமார் 5,100 பேருக்கு மூவேளையும் உணவு வழங்கப்படுகிறது.

மேலும், உணவு வழங்கும் நிகழ்வில் மணமகன் மற்றும் மணப்பெண் வீட்டார் கலந்து கொள்கின்றனர்.

திருமண விழாவினை முன்னிட்டு ஆடல் பாடல்கள் கொண்ட ஒரு வாரம் தொடர் விழாவுக்கும் முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்துள்ளார்.

டிசம்பர் 12 ஆம் திகதி ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள உதயபூர் அரண்மனையில் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல் ஆகியோரின் திருமண விழா நடைபெற உள்ளது.

மேலும், திருமணத்தில் கலந்துகொள்ளும் முக்கியஸ்தர்கள் பயன்படுத்தும் வகையில் 100 விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.

திருமண நாள் இரவு உலக அளவில் பிரபலமான பாடகர்கள் குழு ஒன்று இசை நிகழ்ச்சியும் மேற்கொள்ள உள்ளது.

இந்நிலையில், இஷா அம்பானியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக பிரபலங்கள் பலர் முன்னதாகவே உதய்பூரின் விமான நிலையத்திற்கு வந்திறங்கியுள்ளனர்.

குறிப்பாக, அமெரிக்காவின் முன்னாள் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் வந்துள்ளார். அவரை வரவேற்ற முகேஷ் அம்பானி- நீதா அம்பானி தம்பதியினர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.