முன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத கனேடியர்!

பிரிந்து சென்ற காதலி ஆசையாக அளித்த பரிசை 47 ஆண்டுகளுக்கு பின்னர் திறந்து பார்த்து உணர்ச்சிவசப்பட்டுள்ளார் கனேடியர் ஒருவர்.

கனடாவின் டொரொண்டோ நகரில் குடியிருக்கும் 60 வயதான Adrian Pearce என்பவரே ஏமாற்றிய காதலி அளித்த பரிசை சுமார் அரை நூற்றாண்டு காலம் திறந்து பார்க்காமல் பாதுகாத்தவர்.

1970 காலகட்டத்தில் தம்மை ஏமாற்றிய காதலி அளித்த கிறிஸ்துமஸ் பரிசை திறந்தே பார்க்காமல் பாதுகாத்து வந்துள்ளார் Adrian Pearce.

ஆனால் சுமார் 47 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக இருவரும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு அமைந்த பின்னர், அந்த பரிசை Adrian Pearce திறந்து பார்த்துள்ளார்.

முதல் காதல் தொடர்பில் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளியான கட்டுரை ஒன்றை பார்க்க நேரிட்ட நண்பர் ஒருவர் அட்ரியன் பியர்சை விட்டுப் பிரிந்த அந்த முன்னாள் காதலிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அட்ரியன் பியர்ஸ் தமது மனைவியுடன் இணைந்து பிரிட்டிஷ் கொலம்பியாவில் குடியிருக்கும் அந்த முன்னாள் காதலியை சந்தித்துள்ளார்.

இதனிடையே தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட விழா ஒன்றில் வைத்து அந்த பரிசை அவர் திறந்து பார்த்துள்ளார்.

குட்டி புத்தகம் ஒன்று அந்த பரிசுப் பொதியில் இருந்துள்ளது. ஆலன் என்ற அந்த முன்னாள் காதலிக்கு நம்பவே முடியவில்லை.

தாம் அளித்த பரிசை சுமார் அரை நூற்றாண்டு காலம் திறக்காமலே பாதுகாத்து வந்துள்ளார் என்பது வியப்பாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

நீண்ட பல ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துக் கொண்ட இரு முன்னாள் காதலர்களும் கிறிஸ்துமஸ் பரிசுகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.