மகிந்தவின் இரட்டை பிறவி இந்தியாவில்?? சூடு பிடிக்கும் புதுத் தகவல்..

வெவ்வேறு நாடுகளில் பிறந்திருந்தாலும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனும் இரட்டை பிறவிகள் போல் இருப்பதாக கூறி இந்தியாவை சேர்ந்த ஒருவர் டுவிட்டரில் புகைப்படங்களுடன் பதிவொன்றை இட்டுள்ளார்.

தொலை தொடர்புத்துறையை சேர்ந்த கார்த்தி சீனிவாசன் என்பவர் இந்த பதிவை இட்டுள்ளதுடன் இருவருக்கும் இடையிலான தோற்ற ஒற்றுமை விநோதமான ஒன்றாக இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த ஒற்றுமை தோற்றத்தில் மட்டும் நின்று விடவில்லை. ராஜபக்ச, ஒரு சட்டத்தரணி, அவர் சில சிங்களப்படங்களிலும் நடித்துள்ளார்.

தென்னிந்திய சினிமா ரசிகர்களால், பவர் ஸ்டார் என அழைக்கப்படும் சீனிவாசன் தமிழ்த் திரைப்படத்துறையில் மிகவும் பிரபலமானவர் எனவும் கார்த்திக் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்