வவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் ஹொரோயின் போதைப்பொருளை மறைத்து மகனுக்கு கொடுக்க முற்பட்ட தந்தையை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
சிறையில் உள்ள மகனை பார்வையிட்டு பொருட்கள் கொடுப்பதற்காக அவரின் தந்தை சிறைச்சாலை வளாகத்தினுள் சென்றுள்ளார்.
இதன்போது கொண்டு சென்ற பொருட்களில் சவற்காரத்தினை வெட்டி அதனுள் ஹெரோயின் போதை பொருளை வைத்து மகனுக்கு கொடுக்க முற்பட்ட சமயத்திலே தந்தையை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 71 வயதுடைய நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவரிடமிருந்து 45 கில்லிகிரோம் ஹெரோயினை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.