சுவிட்சர்லாந்தில் ஒரு கிலோ தங்க கிரீடத்தை வென்ற ஈழத்தமிழ் பெண்!

புலம்பெயர் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள IBC- தமிழ் தொலைக்காட்சியின் நாட்டியத் தாரகை நடனக்கலைப் போட்டி நிகழ்ச்சியில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மிதுஜா அமிர்தலிங்கம் வெற்றி பெற்றார்.

சுவிட்சலாந்து போரம் பிரைபோர்க் மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஐ.பீ.சி. தமிழா பிரம்மாண்ட நிகழ்ச்சியில் சர்வதேச நடுவர்கள் முன்நிலையில் தமது திறமைகளை நிரூபித்த ஐந்து போட்டியாளர்கள் மத்தியில் இருந்து மிதுஜா வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வெற்றிப்பெற்ற மிதுஜாவிற்கு IBC தமிழ் நிறுவனத் தலைவர் கந்தையா பாஸ்கரன் மற்றும் வைதேகி பாஸ்கரன் ஆகியோர் ஒரு கிலோ தங்கத்தினாலான கிரீடத்தை வெற்றியாளருக்கு சூடியிருந்தார்கள்.

இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கு பற்றிய மற்றைய நான்கு போட்டியாளர்களுக்கும் தங்கம் பரிசுகளாக வழங்கப்பட்டது.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.பீ.சி தமிழா நிகழ்ச்சியானது உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்ததுடன், அந்த நிகழ்ச்சியின் ஒலி, ஒளி அமைப்புக்கள் மிகப்பெரிய பிரம்மாண்டத்தை ஏற்படுத்தியிருந்தது.

புலம்பெயர் தமிர்களிடையே இருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் அவற்றை உலகறியச் செய்யும் பாரிய பணியையும் ஐ.பீ.சி தமிழ் மேற்கொண்டு வருகின்றது.

ஐ.பீ.சி தமிழினால் முன்னெடுக்கப்படும் பல செயற்றிட்டங்கள் மற்றும் போட்டி நிகழ்ச்சிகள் ஊடாக தமது திறமையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு மேடை மட்டுமல்லாமல் தமது திறமைக்கான ஒரு அங்கீகாரத்தையும் போட்டியாளர்கள் பெற்றுக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.