சீனாவில் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அண்டை நாடுகளில் இருந்து அதிகளவில் பெண்களும், சிறுமிகளும் ஏற்றுமதி செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சமீபத்தில் அதிர்ச்சியளிக்கும் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அண்டை நாடுகளில் இருந்து உணவு, போதை, இரும்பு போன்ற பொருட்களை மட்டுமே திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்து வந்த சீனர்கள் தற்போது பெண்களையும் அதிகமாக ஏற்றுமதி செய்துவருகிறார்களாம்.
உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட சீனாவில், தற்போது ஒரு குழந்தை கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பலரும் சிறுவர்களை காப்பாற்றிக்கொண்டு, பெண்களை கைவிடுகின்றனர். இதனால் அங்கு தற்போது 3.3 கோடிக்கும் அதிகமாக ஆண்களைவிடப் பெண்கள் குறைவாக உள்ளனர்.
திருமணம் செய்துகொள்ள பெண்கள் கிடைக்கமால், சீனாவில் ஆண்கள் பலரும் சுற்றிதவித்து வருகின்றனர்.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கடத்தல் மன்னர்கள், அண்டை நாடுகளில் இருந்து அதிகமான பெண்களையும், சிறுமிகளையும் கடத்தி வருகின்றனர். பெண் கிடைக்காத சீனர்களும், கடத்தி வரும் பெண்களை திருமணம் செய்து வருகின்றனர்.
அவ்வாறு கடத்தி வரும் பெண்கள், மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் நாடுகளில் இருந்து கடத்தி வரப்படுவதாகவும், அதிலும் மியான்மர் போரில் காயமடைந்த காஷின் மற்றும் ஷான் மாநிலங்களில் வறுமையில் வாழும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த பெண்கள் அதிகம் கடத்தி வரப்படுகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
ஊதியத்திற்கு ஏற்ற நல்ல வேலை இருக்கிறது என ஆசைவார்த்தை காட்டியும், ஒரு சிலரை வலுக்கட்டாயமாகவும் கடத்தி வருகின்றனர்.
கடத்தப்பட்டவர்களில், பெரும்பாலும் சிறுமிகளையே சீன ஆண்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.
இவ்வாறு கடத்தப்பட்டு வரும் பெண்கள், சிறுமிகள் சீனா ஆண்களுக்குத் தோற்றத்திலும், அழகிலும் பிடிக்காவிட்டால் பக்கத்தில் இருக்கும் மற்ற கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பாலியல் தொழிலுக்காகவும், திருமணத்திற்காகவும் கொண்டு செல்லப்படுகின்றனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் ஸ்கூல் இன் ஆய்வின் முன்னணி எழுத்தாளர் தெரிவித்துள்ளார்.