இரண்டு புகார் கொடுத்தும் பயனில்லை: தற்கொலைக்கு முயன்ற குடும்பம்

தன்னை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய் மற்றும் மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் சிந்தாமணி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, மஞ்சகுழிபட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (37). இவரது மனைவி முருகாயி (27). தாய் சின்னம்மாள் (60). இந்நிலையில் கடந்த மாதம் தங்கராஜ் வீட்டின் அருகே நடந்த, துக்க காரியத்திற்கு வந்தவர்களுக்கும் இவருக்கும் ஏற்பட்ட தகராறில் தங்கராஜ் கடுமையாக தாக்கப்பட்டார் இதுதொடர்பாக சிந்தாமணி பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  மேற்கொண்டு  நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் விரக்கியடைந்த தங்கராஜ் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். இரண்டு புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், இன்று குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தங்கராஜ், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்கள். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் தற்கொலை முயற்சியை தடுத்து, அவர்களை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.