பிரதமரின் பொருளாதார ஆலோசகர் திடீர் ராஜினாமா…

மத்திய அரசு தொடர்ந்து மோதல் போக்குடன் இருப்பதால், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் தற்போது ராஜினாமா செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு இதுபோன்ற அடாவடி நடவடிக்கைகளில்  ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது . ரிசர்வ் வங்கியின் ஆளுநராக செயல்பட்டு வந்த ரகுராம் ராஜனை நீக்கிவிட்டு, புதிதாக இவரை நியமித்த நிலையில், இவரையும் மத்திய அரசு அடாவடியாக கையாண்டதால், தற்போது அவர் தனது பதவியை, ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர்  சுர்சித் பால்லா இன்று திடீர் ராஜினாமா செய்துள்ளார். நேற்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர், இன்று பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர் ராஜினாமா செய்தது இந்திய அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.