வெளிநாட்டில் மகனின் சிகிச்சைக்காக போராடும் இலங்கை பெண்!

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆடிசம் நோயினால் பாதிக்கப்பட்ட தன் மகனின் சிகிச்சைக்காக தொடர்ந்து போராடி வரும் சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்தவர் ரஜினி ஜெயதிலகா. திருமணம் முடிந்த நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு இவர் கணவருடன் துபாயில் குடியேறியுள்ளார்.

அதன் பின் சில மாதங்களிலே கணவருக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஜெயதிலகாவின் கணவரி இவரை தனியாக விட்டு போலாந்துக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது இவர் ஆடிசம் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் நான்கு வயது மகனான Javindu Jayathilaka-வின் சிகிச்சைக்காக போராடி வருகிறார்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு இவர் அளித்துள்ள பேட்டியில், எங்களின் திருமண உறவு நன்றாக இல்லை, நான் 6 மாத கர்ப்பிணியாக இருந்த போதே உறவு முடிவுக்கு வந்துவிட்டது.

அதன் பின் குழந்தை பெற்றுக் கொண்டேன். குழந்தை பிறக்கும் போதே என்னுடைய குழந்தை சாதரணமாக இல்லை. இதனால் 2016-ஆம் ஆண்டு குழந்தையின் உடல்நிலை பற்றி அறிவதற்காக சோதனை மேற்கொண்டேன்.

அப்போது அவன் ஆடிசம் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். என் கணவர் தன் மகனுக்கு Dh300,000 கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் தற்போது வரை அதை கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் ஜெயதிலகா அட்மினிஷ்டிரேடிவ் எக்சிகியூடிவ்வாக இருப்பதால், தன்னுடைய மகனுக்கு இயன்ற அளவு சிகிச்சை எடுக்க முடியவில்லை.

அதுமட்டுமின்றி இந்த நோயின் காரணமாக சில நேரங்களில் அவருடைய மகன் ஜவிந்து அதிகம் கோபப்படுவாராம். இதன் காரணமாகவே அவர் தன் மகனின் நிலைமைக்காக பல நாட்கள் விடுமுறை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இப்படி பல போராட்டங்களுக்கு பின் இறுதியாக Dubai Autism Centre-ல் மகனிற்கு சிகிச்சை அளிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் இன்சுரன்ஸ் பணம் அந்தளவிற்கு இல்லை.

பல மருத்துவர்களிடம் அவர் தன் மகனை அழைத்துச் சென்று காண்பித்துள்ளார். ஆனால் மகனிடம் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

இதனால் இதற்கு என்ன தீர்வு என்பதை ஆராய்ந்துள்ளார். அப்போது தான் அவர் stem cell therapy மூலம் குழந்தைகளின் ஆட்டிசம் நோயை குணப்படுத்த முடியும் என்பதை கண்டறிந்துள்ளார்.

இதற்கான சிகிச்சை அமெரிக்காவில் கொடுக்கப்படுகிறது. ஆனால் அங்கு 18 வயதிற்கும் குறைவானவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சட்டவிரோதம் என்று கூறப்படுகிறது.

ஆனால் இதே சிகிச்சை மெக்சிகோவில் செய்து கொள்ளலாம் என்பதை அறிந்துள்ளார்.

இதையடுத்து அவர் வரும் ஜனவரி மாதம் 2-ஆம் திகதி மெக்சிகோவிற்கு மகனின் சிகிச்சைக்காக பறக்கவுள்ளார். அதற்கான செலவு 25,000 டொலர் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.

ஜெயதிலா என்னுடைய மகனின் இந்த நிலையை மாற்ற வேண்டும், அவனும் சாதரண குழந்தைகள் போன்று பள்ளிக்கு செல்ல வேண்டும். எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு இது தான் என்று கூறியுள்ளார்.

ஜெயதிலா இதற்காக எந்த ஒரு நிதியும் கேட்டது போன்று தெரியவில்லை என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆடிசம் என்பது மூளை, தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனைத் தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல், மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப்போவதே ஆட்டிசம் எனப்படும்.