மைத்திரியின் பிளான் B கசிந்தது!

தேர்தலுக்கு செல்வதா இல்லையா எனும் மக்கள் அபிப்பிராயத்தை எதிர்பார்க்கவல்ல சர்வசன வாக்கெடுப்பினை நடத்துவதற்கு ஜனாதிபதி தரப்பு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாக தகவல் கிடைத்துள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிரான உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமையுமாயின் தேர்தலை நடத்துவதா இல்லையா என்ற சர்வசன வாக்கெடுப்பை நடத்துவதும் அதுவரை நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதுமான மந்திராலோசனையிலேயே ஈடுபட்டுள்ளதாக தகவல் கூறுகிறது.

இதேவேளை, நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அதனை ஏற்பதற்கு தான் தயாராகவே இருப்பதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எவ்வாறாயினும் தீர்ப்பினை விரைவாக வழங்குமாறு சட்ட மா அதிபர் ஊடாக இன்றைய தினம் மைத்திரி தரப்பு உயர் நீதிமன்றத்தை கோரவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.