முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் அங்கம் வகிப்பதற்கு தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்து நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
இன்றைய தினம் இந்த மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்யுமாறு இந்த மனு மூலம் கோரப்பட உள்ளது.
அரசாங்க நிதியை துஸ்பிரயோகம் செய்த காரணத்தினால் ரணில் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்ற தகுதியற்றவர் என நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் ரணிலின் நாடாளுமன்ற உறுப்புரிமையை தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.