18 வயது மாணவி சுகவீனம் விளையாட்டு மாரடைப்பு மரணம் கல்லூரி நிர்வாகம் நிர்ப்பந்தம் மாணவர்கள் முற்றுகை
சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
சேலையூர் பேராசிரியர்கள் காலனியில் வசிக்கும் ஜெயராஜ். கீழ்ப்பாக்கத்திலுள்ள தேவாலயத்தில் பாஸ்டராக இருக்கிறார். இவரது மனைவி பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவர்களது மகள் மகிமா (18). தாம்பரத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் முதலாமாண்டு படித்து வந்தார்.
மகிமா நேற்று மாலை 5.30 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் கூடைப்பந்து விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மயங்கி விழுந்தார். சக மாணவர்களும் கல்லூரி நிர்வாகத்தினரும் உடனடியாக மகிமாவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள். .
அனால் மகிமாவை மருத்துவனையில் சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே மராடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து
அவரது உடலை உடற்கூறு ஆய்வு செய்யக்கூடாது என்று அவரது வலியுறுத்தினர். இதனால் மகிமாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் மாணவிகள் அனைவரையும் விளையாட்டில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்துவதாகவும், சுகவீனமாக இருந்த மகிமா கட்டாயப்படுத்தப்பட்ட விளையாடியதால்தான் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்று மாணவர்கள் பலர் புகார் கூறினர். மேலும் அவர்கள் கல்லூரியை முற்றுகையிட்டனர்.
பின்னர் காவல்துறையினர் தலையிட்டு பேசி, அவர்களை கலைந்துபோகச் செய்தனர்.
உடல் சுகவீனமடைந்த நிலையில் கல்லூரி நிர்வாகம், மாணவியை கட்டாயப்படுத்தி விளையாடச் செய்ததாகவும் அதனால்தான் மாணவி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்று தகவல் பரவியிருப்பது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.