கடந்த ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி , நடிகை அனுஷ்காவை திருமணம் செய்துகொண்டார்.
முதல் திருமண நாளை முன்னிட்டு ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டதோடு மட்டுமல்லாமல் இருவரும் சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.
அனுஷ்கா தனது டுவிட்டரில், ஒரு நல்ல மனிதரை திருமணம் செய்துகொண்டால் ஒரு பெண்ணின் வாழ்க்கை சொர்க்கம் தான் என பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், திருமண காட்சிகள் மற்றும் விராட் கோஹ்லி அனுஷ்காவை பார்த்து எனது மனைவி என்று அன்புடன் கூறுவது இடம்பெற்றிருக்கிறது.
It’s heaven, when you don’t sense time passing by … It’s heaven, when you marry a good ‘man’ … ? pic.twitter.com/bvZc2x62NM
— Anushka Sharma (@AnushkaSharma) December 11, 2018