உடல் முழுவதும் கடித்து வைத்த வருங்கால கணவரை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி!

அவுஸ்திரேலியாவில் வருங்கால கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த அயர்லாந்து பெண்ணிற்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அயர்லாந்தை சேர்ந்த கேத்ரினா (டினா) காஹில் என்ற 27 வயது இளம்பெண், தன்னுடைய வருங்கால கணவர் டேவிட் வால்ஷ் (29) உடன் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதியன்று இருவரும் இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்றுவிட்டு மதுபோதையில் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கேத்ரினா, தன்னுடைய தோழியை அழைத்துக்கொண்டு பாட்ஸ்டோ பார்க் ஹோட்டல் சென்று மது குடிக்க ஆரம்பித்துள்ளார்.

அவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றதால், சாவி இல்லாமல் மேலும் ஆத்திரமடைந்த டேவிட், கேட்ட வார்த்தைகளால் கேத்ரினா மற்றும் அவருடைய தோழிக்கு மெசேஜ் செய்துவிட்டு, வீட்டின்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளார்.

பின்னர் அதிகமான மது போதையில், கேத்ரினா தன்னுடைய தோழி மற்றும் அவருடைய ஆண் நண்பருடன் வீடு திரும்பியிருக்கிறார்.

அவர்களை பார்த்த டேவிட், கேத்ரினாவையும், அவருடைய தோழியின் நண்பரையும் சேர்த்து வைத்து தவறாக பேசியிருக்கிறார். மேலும், அந்த ஆண் நண்பரை கொடூரமாக தாக்கி, உடல் முழுவதும் கடிக்க ஆரம்பித்துள்ளார்.

நீண்ட நேரம் தடுக்க முயன்றும் முடியாத காரணத்தால், சமையலறைக்கு சென்ற கேத்ரினா கையில் ஒரு கத்தியுடன் வந்து, சரமாறியாக தன்னுடைய வருங்கால கணவரை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே டேவிட் உயிரிழந்தார்.

இந்த வழக்கு விசாரணையை இன்று கேட்டறிந்த நீதிபதி, கேத்ரினாவிற்கு 8 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், 5 ஆண்டுகள் கழித்து அவர் அயர்லாந்திற்கு நாடு கடத்தப்படுவார் எனவும் தெரிவித்து உத்தரவிட்டார்.