திருப்பூர் மாவட்டம் வீரபாண்டிக்கு அருகிலுள்ள சுப்பண்டாப்பாளையத்தை சார்ந்தவர் ஹனிபா (62). அதே பகுதியை சார்ந்த 7 வயதுடைய சிறுமி இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவரது இல்லத்திற்கு அருகில் இருந்த ஹனிபா., நேற்று சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியின் இல்லத்தில் யாரும் இல்லாததால்., இந்த அவலம் நடத்துள்ளது. பெற்றோர் வீட்டிற்கு திரும்பியவுடன் நடந்த சம்பவத்தை கூறிய சிறுமியின் அவலத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., உடனடி விசாரணை மேற்கொண்டு ஹனிபாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.