எதிர்வரும் 17 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் புதிய நடைமுறை….!!

இலங்கையின் சில பகுதிகளில் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த விடயத்தை சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.அந்த வகையில் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தின் போது புகைப்படத்தினை இணையத்தினூடாக பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த முறையானது மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது