இந்தியாவின் முதன்மை செல்வந்தரான முகேஷ் அம்பானி இல்லத் திருமண விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் கண்டும் காணாதது போல் நடந்துகொண்டதால் ரஜினி முக வாட்டத்துடன் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிக ஆடம்பர திருமணமாக முகேஷ் அம்பானியின் இல்லத் திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது.
அவரது மகள் இஷா அம்பானிக்கும், ஆனந்த் பிராமலுக்கும் திருமணம் முடிந்துள்ளது. மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லம் திருவிழாக் கோலம் பூண்டது. திருமணத்திற்கு முன்பான நிகழ்ச்சிகள் உதய்பூரில் நடந்து முடிந்துள்ளது. அதில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நேற்று நடந்த திருமண விழாவிற்காக முகேஷ் அம்பானியின் 27 மாடிகள் கொண்ட அன்டில்லா இல்லம் வண்ண விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இஷா அம்பானி திருமணச் செலவு மட்டும் ரூ.72 கோடிக்கும் அதிகமாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில் தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் சென்றுள்ளனர். இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரமும் சென்றுள்ளார்.
இவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது ரஜினியை பார்ப்பதை பா.சிதம்பரம் தவிர்த்து, தனது செல்போன் பக்கம் கவனத்தைத் திருப்பினார்.
இதனால் ரஜினியின் முகம் மிகவும் வாடிப் போனது. பின்னர் ஒருவாறு சமாளித்துக் கொண்டு, வேறெங்கோ கவனத்தை திசை திருப்பினார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு போஸ் கொடுத்து விட்டு, ரஜினிகாந்த் கிளம்பிச் சென்றுள்ளார்.