தமிழில் சாந்தனு நடித்த சிந்து பிளஸ் 2 என்ற படம் மூலம் அறிமுகமானவர் சாந்தினி. இப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து படங்கள் நடித்தார், ஆனால் அவ்வளவாக மக்களிடம் இவர் பெயர் பிரபலமாகவில்லை.
இவர் கடந்த சில வருடங்களாக நடன இயக்குனர் நந்தாவை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் சமீபத்தில் வெளியாக அதோடு ஒரு சந்தோஷம் செய்தியும் பரவியது. காதல் ஜோடிகள் இருவரின் வீட்டில் திருமணத்திற்கு ஓகே சொல்ல தேதி டிசம்பர் 12 என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று இருவருக்கும் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் முடிந்துவிட்டது. அந்த அழகான காதல் ஜோடிகளை திருமண கோலத்தில் இதோ காணுங்கள்.