கனடாவில் கடந்த ஆறு ஆண்டுகளாக குடியிருந்துவரும் 7 பேர் கொண்ட குடும்பத்தை நாடுகடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
கனடாவில் இருந்து தங்களை நாடு கடத்தினால் தங்கள் உயிருக்கு ஆபத்து என அச்சத்தையும் தெரிவித்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இருந்து கடந்த 2012 ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் Camilo Montoya குடும்பம்.
கொலம்பியாவில் ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதிகளால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் என்பதாலையே கனடாவில் தஞ்சம் புகுந்ததாக கூறும் Camilo, தற்போது தங்களை வெளியேற்றுவது தங்கள் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
கொலம்பியாவில் இருந்த காலகட்டத்தில் குறித்த பிரிவினைவாதிகளால் கடத்தப்பட்டு கடும் போராட்டத்திற்கு பின்னரே மீண்டு வந்ததாக கூறும் அவர்,
நீண்ட ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் தங்களை கொலம்பியாவுக்கே திருப்பி அனுப்புவது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என தெரிவித்துள்ளார்.
கனடாவில் குடிபெயர்ந்த பின்னர் புகலிடம் கோரி பலமுறை விண்ணப்பித்தும் தங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை என கூறும் Camilo,
தற்போது கொலம்பியாவின் நிலை முன்னேற்றமடைந்துள்ளதாகவும் அதனால் திரும்பச் செல்வதில் சிக்கல் இருக்காது எனவும் கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி Camilo குடும்பத்தை கனடாவில் இருந்து கொலம்பியாவுக்கு வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Camilo குடும்பத்தினருக்கு கனடாவில் தற்போது சொத்து இருக்கிறது, சிறிய அளவில் தொழில் செய்தும் வருகின்றனர். இருப்பினும் அவர்களை வெளியேற்ற கனேடிய அரசு உறுதி பூண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.