ரஷ்யாவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை மூன்று சிறுவர்கள் சேர்ந்து துஸ்பிரயோகம் செய்து தூக்கி எறிந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த அனஸ்தேசியா ஆர்லோவா என்ற 28 வயதான பெண், Millerovo பகுதியில் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
ஆனால் அன்று இரவு வீடு வந்து சேரவில்லை என அவருடைய கணவர் அலெக்சாண்டர் (29) பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிரமான தேடுதல் வேட்டை நடந்தும் போது, பனிமூட்டமான பகுதியில் அரைநிர்வாணத்தில் பெண்ணின் சடலத்தை கண்டறிந்தனர்.
அவரோடது முகம் சிதைக்கப்பட்ட நிலையில், அவருடைய கை, கால் பகுதியில் காட்டு விலங்குகளால் சூறையாடப்பட்டு கிடந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மைக்கேல் நிகோரிச் (16), இவான் பி (15) மற்றும் மாக்சிம் எம் (14) என்ற மூன்று சிறுவர்களை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மூன்று பேரும் ஆர்லோவாவின் தலை பகுதியில் பலமாக தாக்கி துஸ்பிரயோகம் செய்துள்ளனர். பின்னர் வெளியில் தெரிந்தால் கிடைக்கும் தண்டனைக்கு பயந்து, இடுப்பு பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
சிறுவர்கள் குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், மூன்று பேரும் இதுவரை எந்த குற்ற செயல்களிலும் ஈடுபட்டதில்லை எனவும், அவர்கள் மிகவும் நல்லவர்கள் என அப்பகுதி மக்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.