கடந்த 2017 ம் வருடம் அக்டோபர் மாதத்தில் சிங்கப்பூரில் வசித்து வரும் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இதற்கு கணவன் தனது மனைவியிடம் நீ எனக்கு துரோகம் செய்தவள்., முதல் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று தொடர்ந்து தனது மனைவியிடம் சந்தேகத்தகராறு மேற்கொண்டு வந்துள்ளார்.
நீண்ட நாட்களாக பொறுமை காத்த அந்த பெண்ணுக்கு., ஒரு சமயத்திற்கு மேலாக சந்தேகம் தீராத கணவரிடம் வாழுவதால் எந்த விதமான பயனும் இல்லை என்று., 2017 ம் வருடம் டிசம்பர் மாதத்தில்., தனது தோழிகளிடம் அடைக்கலம் புகுந்துள்ளார். அந்த சமயத்தில் அவர் கர்ப்பிணியாக இருந்ததும்., அவரது தோழிகள் விபசார அழகிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே மாதத்தின் இறுதியில்., அவர் காலை உணவை வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்ற போது அவரது ஆண் நண்பர் ஒருவர் வந்துள்ளார். இதனை கவனித்த அந்த பெண் அவரிடம் நட்பு முறையில் சாலையில் பேசியுள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த பெண்ணின் கணவர்., தனது மனைவி மீண்டும் சந்தேகம் தீராமல் ஆத்திரத்தில் பெண்ணை கர்ப்பிணி என்றும் பாராமல் கத்தியால் வயிற்றிலேயே குத்தியுள்ளார்.
இதனால் நிலைதடுமாறி சரிந்து விழுந்த அந்த பெண்ணை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்., சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கத்தி குத்தால் நல்ல வேலையாக குழந்தைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.
அந்த பெண்ணின் கணவரை உடனடியாக கைது செய்த காவல் துறையினர்., வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., தற்போது பெண்ணின் கணவருக்கு சுமார் 7 வருட சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டனர்.