லீக்கான விஜய் சேதுபதி கெட்டப் : அதிர்ச்சியில் படக்குழு

சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கெட்டப் லீக்கானதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகர் மெகஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் படம் சயீரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தில் அமிதாப் பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். மேலும் இந்த படம் மூலம் விஜய் சேதுபதி தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன், நயன்தாரா ஆகியோரின் கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட படக்குழு, விஜய் சேதுபதியின் கெட்டப்பை ரகசியமாக வைத்திருந்தது. இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பின்போது விஜய் சேதுபதியின் புகைப்படங்களை எடுத்து யாரோ சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிட்டனர். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

விஜய் சேதுபதியின் கெட்டப்பை பார்த்தால் அவர் யோகியாக நடிக்கக்கூடும் என்று தெரிய வருகிறது. மேலும்  சயீ ரா நரசிம்ம ரெட்டி படத்தின் கிளைமாக்ஸ் காட்சி என்று கூறி ஒரு புகைப்படமும் சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதியின் கெட்டப்பை ரகசியமாக வைத்திருந்த நிலையில், அவரின் புகைப்படங்கள் கசிந்துள்ளது படக்குழுவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.