ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டால் நாட்டுக்கு பாரதூரமான ஆபத்துக்கள் ஏற்படும் என தேசப்பற்றுடைய தேசிய அமைப்புக்களின் ஒன்றிய அழைப்பாளர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
குணதாச அமரசேகரவினால் எழுதப்பட்ட, “முதலாளித்துவத்திற்கு எதிராக எமக்கு உள்ள மாற்றுவழி” என்னும் நூலை அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஸ்ரீ ஞானரதன தேரரிடம் அண்மையில் ஒப்படைத்த போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கடந்த ரணில் அரசாங்கம் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை கொண்டு வருவதற்கு திட்டமிட்டிருந்தனர்.
ரணிலிடம் மீளவும் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் நாடு பாரிய அழிவுகளை சந்திக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.