இரண்டாவது திருமணம் செய்த கெளசல்யாவை அழைத்து விருந்து கொடுத்த பிரபலம்!

தமிழகத்தில் காதல் கணவனை ஆணவப்படுகொலையால் பறிகொடுத்த கெளசல்யா இரண்டாது திருமணம் செய்த நிலையில், இந்த புதுமணத் தம்பதியை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து சிறப்பித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உடுமலை சங்கர் படுகொலைக்கு பின்னர் அவரின் மனைவி கெளசல்யா சாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் சக்தி என்பவரை கடந்த வாரம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர் சிறப்பாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த புதுமண தம்பதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு விருந்து கொடுத்துள்ளார்.

தன் வீட்டிற்கு கெள்சல்யா, சக்தியை வரவழைத்த வரவேற்று உபசரித்து விருந்து தந்திருக்கிறார். புது மண தம்பதிகள் தன் வீட்டில் விருந்து சாப்பிடுவதை புகைப்படமாக எடுத்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், தமிழர் பண்பாடு, புது மண இணையருக்க விருந்து படைத்து உபசரித்தல் தமிழர் பண்பாடு கெளசல்யா-சக்தியோடு எங்கள் வீட்டில் இன்றிரவு என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த தம்பதியை பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.