அமெரிக்காவில் விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த சக பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நபரின் மனைவி இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் பிரமு ராமமூர்த்தி(34).
இவர் அமெரிக்காவின் டெட்ரியாட் நகரிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 3-ஆம் திகதி லாஸ்வேகாஸ் நகரில் இருந்து டெட்ரியாட் நகருக்கு பிரபு ராமமூர்த்தி தனது மனைவியுடன் விமானத்தில் சென்றார்.
மனைவி ஒரு பக்கம் அமர்ந்திருந்த நிலையில், மற்றொரு பக்கம் இளம் பெண் அமர்ந்திருந்தார். இரவு பயணம் என்பதால், பெரும்பாலான பயணிகள் தூங்கியுள்ளனர்.
இந்நிலையில் பிரபு ராமமூர்த்தி தன்னுடைய பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி குற்றம் சாட்டப்பட்டார்.
அந்த பெண் தூங்கிக் கொண்டிருந்த போது ஏதோ ஒரு உணர்ச்சியில் கண்விழித்துள்ளார். அப்போது பிரபு ராமமூர்த்தியின் கை பெண்ணின் பேண்ட்டுக்கு அருகிலும், அந்த பெண்ணின் சட்டை பட்டன்கள் கழற்றப்பட்டும் இருந்துள்ளது.
அந்த பெண் பிரபு ராமமூர்த்தியின் கைகள், சொல்ல முடியாத இடத்தில் இருந்ததாக புகார் தெரிவித்தார்.
இதையடுத்து இது தொடர்பான வழக்கு டெட்ரியாட் நகரிலுள்ள பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், பிரபு ராமமூர்த்திக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
Indian national jailed over sex assault on US flight https://t.co/PMonJMJtNu pic.twitter.com/9zFUNlDwQm
— Zoe Leoudaki (@Zoe_Leoudaki) December 14, 2018
தண்டனை காலம் முடிந்ததும், பிரபு ராமமூர்த்தி, இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது பிரபுராமமூர்த்தியின் மனைவி பாதிக்கப்பட்ட பெண் தான் தன் கணவர் மீது சாய்ந்து படுத்ததாகவும், குறிப்பாக தொடை பகுதியில் படுத்து கிடந்ததாகவும் கூறியுள்ளார்.
இதன் காரணமாகவே நாங்கள் அந்த பெண்ணிற்கு வேறு சீட் கொடுக்கும் படி விமான ஊழியர்களிடம் கேட்டிருந்தோம் என்று கூறியுள்ளார்.
ஆனால், விமான ஊழியர்களோ, அப்படி எதுவும் கோரிக்கை விடுக்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணை சம்பவம் நடந்த பிறகு வேறு சீட்டில் அமர வைத்தோம் என்றும் கூறியுள்ளனர்.