பிரித்தானிய இளவரசர் வில்லியம் திருமண மோதிரம் அணிந்துகொள்ளாமல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய அரச குடும்பத்தினரின் சின்ன நகர்வுகள் கூட ஊடகப் பார்வையில் மிகப்பெரிதாக வெளியாகும்.
சமீபத்தில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் தம்பதிகள் அரண்மனையை விட்டு வெளியேறி வேறு இல்லத்திற்கு குடியேற இருப்பதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இளவரசர் வில்லியம் திருமண மோதிரம் அணிந்துகொள்ளாமல் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சார்லஸ் இளவரசர் தமது இரண்டு திருமணத்தை அடுத்தும் திருமண மோதிரம் அணிந்து கொள்ளாமல் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதில்லை.
இளவரசர் ஹரி திருமணத்திற்கு பின்னர் இதுவரை திருமண மோதிரம் அணிந்து கொள்ளாமல் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொண்டது இல்லை.
ஆனால் இளவரசர் வில்லியம் சமீபத்தில் திருமணம் மோதிரம் இன்றி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இச்சம்பவம் விவாதமானதும், அரண்மனை தகவல்களை தொகுக்கும் பென்னி ஜூனியர் என்பவர் தகுந்த விளக்கமளித்துள்ளார்.
அதில், வில்லியம் மற்றும் கேட் தம்பதிகளின் திருமணம் முடிந்த அப்போதே இந்த விவகாரம் தொடர்பில் அரண்மனை உரிய விளக்கமளித்துள்ளது.
கேட் மற்றும் வில்லியம் தங்களின் திருமண மோதிரங்களை கைமாறியிருந்தாலும், தனிப்பட்ட காரணங்களுக்காக இளவரசர் வில்லியம் திருமண மோதிரம் அணிவதில்லை எனவும் பென்னி ஜூனியர் விளக்கமளித்துள்ளார்.
மட்டுமின்றி எலிசபெத் ராணியாரின் கணவர் பிலிப் கூட தனிப்பட்ட காரணங்களுக்காக திருமண மோதிரம் அணிவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
3 பிள்ளைகளின் பெற்றோரான வில்லியம்,கேட் தம்பதிகளுக்கு இடையேயும் கருத்துவேறுபாடுகள் இருந்துள்ளது என்றும், ஆனால் அது அவர்கள் காதலித்துவந்த காலகட்டத்தில் எனவும் தகவல் வெளியானது.
தங்களது காதலை ஒதுக்கிவிட்டு இருவரும் பிருந்தும் வாழ்ந்துள்ளனர். கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்துள்ளனர். கேட் மிடில்டனின் குடும்ப நிலையே இருவரும் பிரிய காரணம் எனவும் அப்போது பேசப்பட்டது.
கேட் மிடில்டனின் தாயார் விமான பணிப்பெண்ணாக இருந்தவர் என்பதால் அதை இளவரசர் வில்லியத்தின் நண்பர்கள் சிலர் கேலி செய்ததாகவும், அதனாலையே சில காலம் இருவரும் பிரிந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இளவரசர் வில்லியம் ராணுவத்தில் இணைந்து பணியாற்ற சென்றுள்ளார். ஆனால் அதிக காலம் இருவருக்கும் பிரிந்திருக்க முடியாது என உணர்ந்ததும், மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர்