தெருவில் அனாதையாக கிடந்த பிஞ்சு குழந்தை… தாயாரை தேடும் பொலிஸ்

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்து 5 மாதமேயான பிஞ்சு குழந்தையை சாலையோரத்தில் இருந்து மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த குழந்தையை சாலையில் வீசிய தாயாரை பொலிசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் கிராமத்தில் சாலையோரம் டிசம்பர் 13 ஆம் திகதி மாலை குழந்தை ஒன்றின் அழுக்குரல் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டுயிருந்தது.

இதனால் அதிர்ச்சியான அப்பகுதி மக்கள் எங்கிருந்து சத்தம் வருகிறது எனதேடிச்சென்று பார்த்தபோது மரம் ஒன்றின் கீழ் துணியால் போர்த்தப்பட்ட குழந்தை சாலையோரம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர்.

இதனையடுத்து அந்த குழந்தையை அங்கிருந்து மீட்ட பொதுமக்கள், குறித்த குழந்தையானது பிறந்து 5 நாட்களே ஆனது என தொப்புள் கொடி மூலமாக தெரியவந்தது.

உடனே குழந்தையை களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் குழந்தைக்கு முதலுதவி செய்தனர்.

இதுதொடர்பாக உடனடியாக களம்பூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து வந்த பொலிஸார் குழந்தையை படம் எடுத்துக்கொண்டு வழக்கு பதிவு குழந்தை யாருடையது, யார் தூக்கி வந்தது என விசாரணை நடத்திவருகின்றனர்.

அந்த குழந்தையை பார்த்தவர்கள் அனைவரும் அதன் அழகான மெல்லிய சிரிப்பில் அனைவரும் மயங்கியுள்ளனர்.

10 மாதம் சுமந்து பெற்ற தாய்க்கோ அந்த சிரிப்பு கசப்பை தந்துள்ளது அதனால் தான் வீசிவிட்டு சென்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.